பிக் பொஸ் வீட்டில் கண்ணை மறைக்கும் பாலாஜியின் காதல்!

213

பிக்பொஸ் நிகழ்ச்சி கடந்த 40 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வரும் நிலையில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் வெளியேற்றும் படலம் நடக்கும் என்பது அனைவரும் அறிந்ததே.

அந்த வகையில் இன்றைய நோமினேஷன் படலத்தில் பெரும்பாலானோர் அனிதாவை தெரிவு செய்தனர். குறிப்பாக அர்ச்சனா, நிஷா, ரியோ, சம்யுக்தா ஆகியோர் அவரைத் தெரிவு செய்கின்றனர். அனிதா சிடுமூஞ்சியாக இருப்பதாக சம்யுக்தா, தெரிவுக்கான காரணத்தை கூறுகின்றார்.

அடுத்ததாக சுசித்ரா தெரிவு செய்யப்படுகிறார். ஷிவானி, ரம்யா, ஜித்தன் ரமேஷ் ஆகியோர் அவரை தெரிவு செய்கின்றனர். அதன் பின்னர் பாலாஜியை சோம், ஆரி ஆகியோர் தெரிவு செய்கின்றனர்.

பாலாஜியை தெரிவு செய்வதற்கான காரணத்தை ஆரி குறிப்பிடும்போது, ‘பாலாஜிக்கு அவருடைய காதல் மறைப்பதாக தெரிவித்துள்ளார்.

அதேபோல் ஆரியை பாலாஜி, ஆஜித் ஆகியோர் தெரிவு செய்கின்றனர். இந் நிலையில் இந்த வாரம் சுசித்ரா, அனிதா, பாலாஜி மற்றும் ஆரி ஆகிய நால்வர் வெளியேறும் பட்டியலில் இருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE