பிசிசிஐயின் புதிய தேர்வுக்குழு தலைவராக அஜித் அகர்கர் நியமனம்

124

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) நேற்று இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் புதிய தேர்வுக்குழு தலைவராக முன்னாள் இந்திய ஆல்-ரவுண்டர் அஜித் அகர்கரை நியமித்தது. கடந்த பிப்ரவரி மாதத்தில் சேத்தன் ஷர்மா பதவியில் இருந்து விலகினார்.

இந்நிலையில் சேத்தனுக்கு பதிலாக அகர்கர் நியமிக்கப்பட்டுள்ளார். அஜித் அகர்கர் இந்திய அணிக்காக 191 ஒருநாள் மற்றும் 26 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார் மற்றும் தலைமை தேர்வாளருக்கான போட்டியில் முன்னணியில் இருந்தவர்.

ஒரு தேர்வாளராக, அகர்கருக்கு அத்தகைய அனுபவம் இல்லை என்றாலும் அவருக்கு கிரிக்கெட் பற்றி நிறைய அறிவு உள்ளது. தலைமை தேர்வாளர் ஆன பிறகு அஜித் அகர்கர் கூறுகையில், “ஆண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை தேர்வாளராக நியமிக்கப்பட்டது எனக்கு பெருமை அளிக்கிறது” என்றார்.

maalaimalar

SHARE