சுவிட்சர்லாந்து நாட்டில் பிச்சை எடுக்கும் நபர்களுக்கு 100 பிராங்க் வரை அபராதம் விதிக்கும் புதிய சட்டம் நடைமுறைக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுவிஸில் உள்ள வாட் மாகாணத்தில் பிச்சை எடுப்பதற்கு நிரந்தரமான தடை விதிக்க வேண்டும் என சுவிஸ் மக்கள் கட்சி கடந்தாண்டு நாடாளுமன்றத்தில் புதிய சட்ட மசோதாவை கொண்டுவந்தது.
இந்த சட்ட மசோதாவிற்கு பெரும்பான்மையான ஆதரவு கிடைத்துள்ள நிலையில், இச்சட்டம் மிக விரையில் நடைமுறைக்கு வரவுள்ளது.
ஆனால், இந்த புதிய சட்டம் பிச்சைக்கார்களின் அடிப்படை உரிமையை பறிக்கும் செயலாக இருக்கிறது என சமூக நல அமைப்பு ஒன்று நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக நேற்று விசாரணை நடைபெற்றபோது, பிச்சை எடுப்பதற்கு உள்ள தடையை நீக்க முடியாது எனக் கோரி நீதிபதிகள் மனுவை நிராகரித்துள்ளனர்.
இதுமட்டுமில்லாமல், பிச்சை எடுக்கும் நபர்களுக்கு 50 முதல் 100 பிராங்க் வரை அபராதம் விதிக்கப்படும்.
மேலும், சிறுவர்கள் மற்றும் குழந்தைகளை பிச்சை எடுப்பதற்கு கட்டாயப்படுத்தும் நபர்களுக்கு 500 முதல் 2,000 பிராங்க் வரை அபராதம் விதிக்கவும் இச்சட்டம் வழிவகை செய்கிறது.
பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள இச்சட்டம் இன்னும் சில தினங்களில் நடைமுறைக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வாட் மாகாணம் மட்டுமின்றி சுவிஸில் உள்ள ஜெனிவா, பேசல், சூரிச் உள்ளிட்ட மாகாணங்களிலும் இப்புதிய சட்டம் நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.