பிடியாணையை இடைநிறுத்த இளஞ்செழியன் மறுப்பு! நீதிமன்ற கட்டளைக்கு பணிந்து நடக்க பணிப்பு?

188

3830384911

சட்டத்தரணி ஒருவருக்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை இடை நிறுத்திக் கட்டளை பிறப்பிக்குமாறு கோரி யாழ் மேல் நீதிமன்றத்தில் செய்யப்பட்ட விண்ணப்பத்தை நீதிபதி இளஞ்செழியன் நிராகரித்துள்ளார்.

அத்துடன் அது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவையும் அவர் தள்ளுபடி செய்து மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தின் கட்டளைக்குப் பணிந்து முதலில் அதனை நிறைவேற்ற வேண்டும் என பணித்துள்ளார்.

மல்லாகம் நீதிமன்றப் பதிவாளரை தொலைபேசி ஊடாக அச்சுறுத்தியாக செய்யப்பட்ட முறைப்பாடு ஒன்றையடுத்து, சட்டத்தரணி ஒருவருக்கு எதிராக தெல்லிப்பழை பொலிஸாரினால் மல்லாகம் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் கடந்த வெள்ளிக்கிழமை (2) குறித்த சட்டத்தரணிக்கு எதிராக மல்லாகம் நீதவான் பிடியாணை கட்டளை பிறப்பித்திருந்தார்.,

இந்த பிடியாணையை இடைநிறுத்தி வைப்பதற்கு கட்டளை பிறப்பிக்குமாறு கோரி சட்டத்தரணி ஊடாக யாழ் மேல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

யாழ்,மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் முன்னிலையில் இந்த மனு தொடர்பில் திங்கட்கிழமை 4 ஆம் திகதி திறந்த நீதிமன்றத்தில் சமர்ப்பணம் முன் வைக்கப்பட்டது.

இந்த மனுவைப் பரிசீலனை செய்த நீதிபதி இளஞ்செழியன் அது தொடர்பாக செய்யப்பட்ட சமர்ப்பணத்தை நிராகரித்து, மனுவை தள்ளுபடி செய்தார்.

அத்துடன் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தின் கட்டளைக்கு முதலில் பணிந்து உரிய நடவடிககை மேற்கொள்ளுமாறு பணித்துள்ளார்.

மேலும், நீதிபதி இளஞ்செழியன் தனது கட்டளையில் தெரிவித்ததாவது,

நீதிமன்றத்திடம் வருகின்ற வழக்குகள் தொடர்பில், நீதிமன்றத்தின் சட்ட நடவடிக்கை முறைகளாகவே, அழைப்பாணைகள், பிடியாணைகள் என்பன பிறப்பிக்கப்படுகின்றன.

இந்த சட்ட நடவடிக்கைகளுக்கு பணிந்து நடக்க வேண்டியது சம்பந்தப்பட்டவர்களின் கடமையாகும்.

குறித்த நீதிமன்றத்தின் முன்னால் உள்ள இந்த வழக்கில் மல்லாகம் நீதிமன்றத்தினால் கடந்த 2 ஆம் திகதி பிறப்பிக்கப்பட்ட பிடியாணை இன்னும் நடைமுறையில் உள்ளது.

எனவே, கட்டளைக்கு மதிப்பளித்து, நீதிமன்றத்தில் சந்தேக நபர் ஆஜராவதே சட்டத்தின் தேவைப்பாடு ஆகும்.

இவ்வாறு அங்கு ஆஜராகும்போது, நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்படுகின்ற கட்டளை, சந்தேக நபருக்கு எதிராக இருக்குமானால் அது தொடர்பில் மேல் நீதிமன்றத்தில் மீளாய்வு மனு தாக்கல் செய்ய முடியும்.

ஆனால் தற்போது இந்த மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், நீதவான் நீதிமன்ற உத்தரவைப் புறந்தள்ளி, அதனை இடைநிறுத்தக் கோருவதாகும்.

இந்தக் கோரிக்கையை அல்லது இந்த விண்ணப்பத்தை ஒரு சட்ட நடைமுறையாக ஏற்றுக்கொள்ள முடியாது.

முதலில் நீதவான் நீதிமன்றத்தின் கட்டளைக்குப் பணிய வேண்டும். அதன் பின்னரே முறைப்பாடு செய்ய வேண்டும்.

நீதவான் நீதிமன்றத்தின் கட்டளையை மதிக்காமல் மேல் நீதிமன்றத்தில் நீதி வழங்குமாறு கோருவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

அத்துடன் முதல்நிலை நீதிமன்றமாகிய நீதவான் நீதிமன்றத்தின் கட்டளையில் தேவையற்ற விதத்தில் சட்ட ரீதியாக மேல் நீதிமன்றம் தலையீடு செய்ய முடியாது.

எனவே, இந்த நீதிமன்றம் சம்பந்தப்பட்ட பிடியாணையை இடைநிறுத்தக் கோரும் மனுவை தள்ளுபடி செய்கின்றது என்றார் நீதிபதி இளஞ்செழியன்.

SHARE