பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்த ஞானசார தேரர் உட்பட மூவர் இன்று காலை நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.
இவர்கள் இன்று கோட்டை நீதவான் பிரியந்த லயனகே முன்னிலையில் ஆஜராகியுள்ளனர்.
புனித குர்ஆனுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தியமை மற்றும் ஜாதிகபல சேனா அமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பிற்கு ஏற்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் ஞானசார தேரர் உள்ளிட்ட மூவருக்கு எதிராக சுமத்தப்பட்டிருந்தது.
அது குறித்த வழக்கு விசாரணைகளுக்காக நேற்றையதினம் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் நேற்றையதினம் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகாமையால் கொழும்பு நீதவான் நீதிமன்றம், அவர்களுக்கு எதிராக பிடியாணை பிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.