கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ உட்பட மூவரை பிணையில் செல்ல கொழும்பு கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இவர்களை ஒரு மில்லியன் ரொக்க பிணையிலும், தலா 10 மில்லியன் ரூபா பெறுமதியான 4 சரீரப்பிணையிலும் விடுதலை செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் நிசாந்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.
நாமல் ராஜபக்ஸவுக்கு சொந்தமான நிறுவனத்தினூடாக முறைக்கேடாக கிடைத்த பணத்தில் ஹேலோகோப் நிறுவனத்தின் பங்குகளை கொள்வனவு செய்தமை தொடர்பாகவே இவர் 15ஆம் திகதி கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.