பித்த வெடிப்பை நிரந்தரமாக நீக்க சூப்பர் ஐடியா!

240

பாதங்களில் இருக்கும் பித்த வெடிப்புகள் நமது காலின் அழகையே கெடுத்துவிடும். அத்தகைய பித்த வெடிப்புகளை சுலபமாக போக்க சூப்பரான டிப்ஸ்கள் இதோ,

பித்த வெடிப்பை போக்கும் வழிகள்?
  • பாதங்களை வெதுவெதுப்பான நீரில் 20 நிமிடம் ஊறவைத்து, ஸ்க்ரைப்பரால் தேய்த்து, பாதங்களுக்கான க்ரீமை தடவி, 20 நிமிடம் கழித்து பாதங்களை நன்றாக கழுவ வேண்டும்.
  • வெயில் காலத்தில் அல்லது பனிக்காலத்தில் கால்களுக்கான உறைகளை தவறாமல் அணிந்துக் கொள்ள வேண்டும். இதனால் பாதத்தின் ஆரோக்கியம் பாதுகாப்பாக இருக்கும்.
  • வெந்நீரில் உப்பு, எலுமிச்சை சாறு, கிளிசரின் மற்றும் ரோஸ் வாட்டர் ஆகியவற்றைக் கலந்து, அதில் பாதங்களை ஊறவைத்து ஸ்க்ரைப்பரைக் கொண்டு பாதங்கள் மற்றும் அதனை சுற்றி நன்றாக தேய்க்க வேண்டும்.
  • ஒரு தேக்கரண்டி நீர்க்காத கிளிசரின், ரோஸ் வாட்டர், எலுமிச்சை சாறு ஆகிய அனைத்தையும் கலந்து கால் பித்த வெடிப்புகளின் மீது தடவி, இரவு முழுவது வைத்து காலையில் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
  • 2 தேக்கரண்டி அரிசி மாவுடன், சிறிதளவு தேன் மற்றும் வினிகரை கலந்து பேஸ்ட் செய்து, அதை பாதங்களில் உள்ள வெடிப்புகள் மீது இரவில் தடவி, காலையில் கழுவ வேண்டும்.
  • வறண்ட பாதங்களின் சருமத்தை போக்க, வெதுவெதுப்பான நீரில் 10 நிமிடம் ஊறவைத்து, ஒரு தேக்கரண்டி ஆலிவ் ஆயில் அல்லது பாதாம் எண்ணெய் கொண்டு காலில் தேய்க்க வேண்டும்.
SHARE