சூர்யாவிற்கு தற்போது தேவை ஒரு சூப்பர் ஹிட். அடுத்தடுத்த படங்களின் தோல்வியால் கொஞ்சம் திரைப்பயணத்தில் சறுக்கினாலும், பசங்க-2 மூலம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தார்.
இந்நிலையில் இவர் நடிப்பில் மிகவும் எதிர்ப்பார்ப்பில் இருக்கும் படம் 24. இப்படம் ஏப்ரல் 14ம் தேதி தெறி படத்துடன் மோதுவதாக இருந்தது.
ஆனால், தற்போது இப்படம் தள்ளிப்போவதாக கூறப்படுகின்றது. இச்செய்தி ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.