பிரகீத் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் – 3 இராணுவத்தினருக்கும் விளக்கமறியல் நீடிப்பு:

320

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இராணுவ அதிகாரிகள் மூவரையும் எதிர்வரும் 7ஆம் திகதிவரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு ஹோமாகம நீதவான் வை.ஆர். பி. நெலும்தெனிய உத்தரவிட்டார்.

இந்தச் சம்பவம் தொடர்பிலான விசாரணையின் முன்னேற்ற அறிக்கையை அடுத்த வழக்கு தினத்தன்று சமர்ப்பிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

பிரகீத் எக்னெலிகொட, 2010 ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் திகதி காணாமல் போயுள்ளதாக அவருடைய மனைவி செய்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

SHARE