பிரசவத்தின் போதும் மேக்கப் செய்துகொண்ட பெண்: அருகில் இருந்து உதவிய கணவர் (வீடியோ இணைப்பு)

317
அமெரிக்காவை சேர்ந்த அழகுக்கலை நிபுணர் ஒருவர் தனது பிரசவத்தின் போதும் மேக்கப் செய்துகொண்ட புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.அமெரிக்காவின் நியூயார்க் நகரை சேர்ந்தவர் அலாஹா மஜித். அழகுக்கலை நிபுணரான இவருக்கு ஒப்பனை செய்துகொள்வது என்பது விருப்பமான ஒன்று.

விதவிதமாக ஒப்பனை செய்துகொண்டு அந்த புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் அலாஹா பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில் கடந்த மாதம் 15ம் திகதி அலாஹாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அப்போது பிரசவ அறையில் இருந்துகொண்டே அலாஹா தனது முகத்துக்கு ஒப்பனை செய்துள்ளார்.

அவருக்கு வலி அதிகமாக இருந்த சமயத்தில் அவரது கணவர் ஒப்பனை செய்துள்ளார்.

இறுதியில் பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்த அலாஹா பிரவத்தின்போது தான் செய்துகொண்ட ஒப்பனைகள் தொடர்பான புகைப்படங்களை சமூகவலைத்தளமான இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார்.

இந்த புகைப்படங்களுக்கு ஆதரவாகவும் எதிராகவும் பலரும் தங்களின் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

SHARE