பிரசில்ஸ் குண்டுவெடிப்பால் கட்டுநாயக்கவிற்கும் பலத்த பாதுகாப்பு

241
பிரச ல்ஸில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களின் எதிரொலியாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இன்று பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தரவுள்ள விமானமொன்றுக்கும் விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த மிரட்டல் தொலைபேசி அழைப்பு தொடர்பில் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

எச்சரிக்கை விடுக்கும் வகையில் தொலைபேசி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறெனினும் விமான நிலையத்திற்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டமை குறித்து விமான நிலைய அதிகாரிகளோ பாதுகாப்பு தரப்பினரோ உத்தியோகபூர்வமாக தகவல்கள் எதனையும் வெளியிடவில்லை.

SHARE