பிரஜைகள் குழு இரண்டாகப் பிளவு – நானே என்றும் தலைவர் என்கிறார் தேவராஜா

265

காணாமற்போனோர் விடயங்கள் தொடர்பாக அவற்றைக்கண்டறிந்து ஐ.நா சபைக்கு சமர்ப்பிக்கும் முகமாகவும், அரசிற்குத் தெரியப்படுத்தும் விதமாக செயற்பட்டு வருகின்ற பிரஜைகள் குழுவானது இன்று இரண்டாகப் பிளவுபட்டிருப்பது தமிழ் மக்கள் மத்தியில் வேதனைதரும் விடயமாகும். மீண்டும் இவர்கள் இணைந்து செயற்படவேண்டும் என்பதையே தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றனர். இதன் தலைவராகச் செயற்படுகின்ற தேவராஜா என்பவர்

unnamed-210

இராணுவத்தினராலும், புலனாய்வாளர்களாலும், பொலிஸாரினாலும் அச்சுறுத்தப்பட்டதை அனைவரும் அறிவர். யுத்த காலத்திலும் அதற்குப் பின்னரும் ஒற்றுமையாகச் செயற்பட்டுவந்த பிரஜைகள் குழு இன்று கோபாலகிருஷ்ணன் ராஜ்குமாரின் தலைமையில் அதன் அங்கத்தவர்கள் தெரிவுசெய்யப்பட்டிருக்கின்றார்கள். புதிய நிர்வாகம் தெரிவுசெய்யப்பட்டு செயற்பட்டுக்கொண்டிருப்பது தொடர்பில் முன்னாள் தலைவர் தேவராஜாவிடம் ஊடகவியலாளர்கள் வினவியபோது, எனது ஒப்புதல் இன்றி எவரையும் தெரிவுசெய்ய முடியாது. என்னை அதிலிருந்து வெளியேற்றும் அதிகாரமும் அவர்களுக்கு இல்லை. எவ்வித கடிதங்களும் எனக்கு அனுப்பிவைக்கப்படவி;ல்லை. நிதிமோசடி காரணமாகவே என்னை அதிலிருந்து ஒதுக்குவதாக அவர்கள் கூறுகிறார்கள். பிரஜைகள் குழு எனது தலைமையில் இன்று செயற்படுகின்றது. யார் போலியானவர்கள் என்பது இன்னும் ஒரு மாதகாலத்தில் தெரியவரும். நான் பதவிக்கு ஆசைப்படுபவன் அல்ல. எனது தலைமையின் கீழ் புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் தலைவர் பதவியிலிருந்து ஒதுங்கி புதியவர்களின் செயற்பாட்டிற்காக முன்னின்று உழைப்பேன். இப்பிரஜைகள் குழுவோடு முன்னின்று செயற்பட்டவர் சன் மாஸ்ரர் என்பவராவார். அவர்; தற்போது தலைமறைவாகி வாழ்ந்துகொண்டிருக்கின்றார் என்பதையும் இவ்விடத்தில் சுட்டிக்காட்டுகின்றேன்.

இந்த பிரஜைகள் குழுவிற்கு எங்கிருந்து பணம் வருகிறது என வினவியபோது, வெளிநாடுகள் பண உதவிகளை எங்களுக்குச் செய்வதில்லை. கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்களே எமது செயற்பாட்டிற்காக அவ்வவ்போது பண உதவிகளைச் செய்வார். அவ்வாறு இருக்க என்னை நிதி மோசடி செய்தவர் என இவர்கள் கூறுவது பொருத்தமற்றது. இவ்வாறு இவர்கள் திரபுபடுத்தி பிரஜைகள் குழுவைத் தொடர்புபடுத்திக் கூறமுனைவது, மக்களின் நலனில் இவர்கள் அக்கறை இல்லாது செயற்படுவதையே எடுத்துக்காட்டுகிறது. நிர்வாகப் பிரச்சினை எனில் நிர்வாகத்தினருடன் கலந்தாலோசித்து அதற்கான தீர்வுகளைப் பெறவேண்டும். பிரஜைகள் குழுவின் செயற்பாடுகளை சீர்குலைப்பதற்காக ஒருசிலர் அரசுடன் இணைந்து செயற்படுவதாகவே நான் கருதுகிறேன் என்கிறார்.

இவ்விடயம் தொடர்பில் புதிதாக உருவாக்கம் பெற்ற பிரஜைகள் குழுவினால் முன்னாள் தலைவர் தேவராஜா தொடர்பில் எவ்வித அறிக்கைகளும் வெளியிடப்படவில்லை. இந்நிலையிலேயே நேற்றையதினம் பிரஜைகள் குழுவின் தலைவர் தேவராஜா அவர்கள் ஊடக சந்திப்பொன்றினை ஒழுங்குசெய்திருந்தார். காணாமற்போனோர் விடயம் என்பது மிக முக்கியமானது. இதுவொரு போட்டிபோடும் விளையாடடு அமைப்பாக இருந்துவிடமுடியாது. வடகிழக்கு உட்பட அனைத்து இடங்களிலும் பிரஜைகள் குழு செயற்பட்டுவருகின்றது.

சர்வதேச ரீதியிலும் இதற்குத் தனியானதொரு இடம் உண்டு. ஒரு சில வெளிநாட்டு நிறுவனங்கள் பிரஜைகள் குழுவிற்கான நிதியினை வழங்கவிருந்த சமயத்தில் தான் இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நிர்வாகச் சிக்கலை நாம் மக்கள் மத்தியில் கொண்டுசெல்லக்கூடாது. ஒரு வெளி நாட்டு நிறுவனம் காணாமற்போனோர் குடும்பத்திற்கு தலா ஒரு இலட்சம் வழங்கினால் கூட அது வரவேற்கத்தக்கது. அவ்வாறான செயற்பாடுகளை இந்த பிரஜைகள் குழுவினால் செய்யமுடியும். 15பேர் கூடி வெறுமனே புதிதாக ஒரு பிரஜைகள் குழுவினை நியமிப்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது எனக்குறிப்பிட்ட பிரஜைகள் குழுவின் தலைவர் எமது செயற்பாடுகளை துரிதகதியில் செயற்படுத்தவிருக்கிறோம். இவ்வாறிருக்கையில் அவரின் கருத்திற்கு மாற்றுக்கருத்துக்கள் எதனையும் புதிதாக தெரிவுசெய்யப்பட்டிருக்கின்ற பிரஜைகள் குழு வெளியிடவில்லை என்பதுவும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறிருக்க நானே தலைவர் என்ற வகையில் தேவராஜா அவர்கள் தொடர்ந்தும் தனது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறார். இவ்வாறு பிரிந்து செயற்படுவது என்பது ஒரு காத்திரமான முடிவல்ல. மீண்டும் ஒன்றிணைந்து தமது கட்டமைப்பில் இருக்கின்ற பிரச்சினைகளை சீர்செய்து இப்பிரஜைகள் குழு செயற்படுவதனால் தமிழ்; மக்கள் நன்மையடைவார்கள். குரோத மனப்பாங்குடன் செயற்படுவதை நிறுத்திவிட்டு, ஒற்றுமையோடு பிரஜைகள் குழு தமிழ் மக்களுக்காக செயற்படவேண்டும். இவ்வாறு செயற்படுவதன் ஊடாக தமிழ் மக்கள் சுமுகமான தீர்வுத்திட்டங்களைப் பெற்றுக்கொள்ள அது வழிவகுக்கும். இல்லாதுவிடின் வன்முறையான செயற்பாடுகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படும் என்பதில் எவ்வித சந்தேகங்களுமில்லை.

SHARE