பிரதமர் பதவியை மஹிந்தவுக்கு கொடையாக வழங்கியுள்ளேன்! நிமல் சிறிபால டி சில்வா.

353
பிரதமர் பதவியை கொடையாக வழங்கியுள்ளதாக முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
nimal

எதிர்க்கட்சித் தலைவர் என்ற ரீதியில் பொதுவான நடைமுறையின் அடிப்படையில் அடுத்த பிரதமர் நானே. எனினும் நான் வெஸ்ஸந்தர சிறிசங்கபோ போன்ற பண்டைய கொடையாளிகளைப் போன்று  பிரதமர் பதவியை கொடையாக வழங்கினேன்.

எனக்கு வர வேண்டிய பதவியை நான் மிகுந்த விருப்பத்துடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு விட்டுக்கொடுத்தேன். ஏனெனில் நாம் மக்களின் பக்கம் இருக்கின்றோம்.

மக்களுக்கு ஆசீவாதம் ஏற்படும் வகையில் நாம்அரசியல் செய்ய வேண்டும். பதவிகள் பெரிதல்ல. கட்சி ஆதரவாளர்களே எமக்கு முக்கியம்.

கட்சி ஆதரவாளர்களை பாதுகாத்து, கட்சியை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

எமது அரசாங்கம் இருந்த காரணத்தினால் பாரியளவில் அபிவிருத்தி மேற்கொள்ள முடிந்தது.

மஹிந்த ராஜபக்சவை பிரதமராக நியமிக்க நம் அனைவருக்கும் தேவைப்பாடு உண்டு.

அவருக்கு 113 ஐ விடவும் அதிகளவான ஆசனங்களை வழங்க வேண்டும் என நிமல் சிறிபால டி சில்வா ஊவா மாகாணத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டமொன்றில் தெரிவித்துள்ளார்.

சிங்கள வரலாற்றில் வெஸ்ஸந்தர சிறிசங்கபோ போன்றோர் மிகப்பெரிய கொடையாளிகளாக கருதப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE