பிரதமர் மோடியே இலங்கைப் பயணத்தை இரத்து செய்க! சென்னையில் ஆர்ப்பாட்டம்.

372

 

இனக்கொலை நீதிக்கான போராட்டத்தில் ஐ.நா விசாரனைக் குழு தள்ளிப்போடப் பட்டுள்ள சூழலில் இந்தியப் பிரதமர் மோடி ஈழத் தமிழர்களின் நீதிக்காக குரல் எழுப்பாமல் இலங்கை அரசுடன் நல்லுறவு பேணவும் வரும் மார்ச்சு 13 அன்று இலங்கை செல்ல உள்ளார்…

பிரதமர் மோடி இனப்படுகொலை செய்த இலங்கையை புறக்கணித்து இலங்கை பயணத்தை இரத்து செய்க என வலியுறுத்தி இளந்தமிழகம் இயக்கம், திராவிடர் விடுதலைக் கழகம், தமிழ்நாடு மாணவர் இயக்கம் சார்பில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் நடைபெற்றது .

SHARE