சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான பிரதிநிதிகள் சீன தேசிய மக்கள் காங்கிரஸின் தலைவர் வங் தூ ச்யேங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உட்பட 15 பேர் அடங்கிய தூதுக்குழுவுடன் சீனாவுக்கு விஜயம் செய்துள்ள பிரதமர், சீன மற்றும் இலங்கை முதலீடுகள் குறித்து அந்நாட்டு தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றார்.
இரண்டு நாடுகளுக்கும் இடையில் பொருளாதார ஒத்துழைப்புகளை ஏற்படுத்திக்கொள்ளும் 10 உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட உள்ளமை குறிப்பிடதக்கது.