பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வன்னி விஜயம் ஆபத்தானது..!

155

தமிழ் மக்களுடைய அரசியல் தீர்வுத் திட்டத்திற்கு முரணான செயற்பாடுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒரு சில பாராளுமன்ற உறுப்பினர்கள் மகுடி வாசிக்கின்றனர். இதனைச் சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொள்கின்ற தற்போதைய கூட்டாச்சி அரசாங்கம் தேசியம், சுயநிர்ணய உரிமை, வடகிழக்கு இணைப்பு, பொலிஸ் காணி அதிகாரம், அரசியல் கைதிகளின் விடுதலை, போர்க்குற்ற விசாரணை, இனப்படுகொலை, வலிந்து காணமாக்கப்பட்டோர் விடையங்கள். இவ்விடையங்களை ஒரு புறத்தில் வைத்துவிட்டு அபிவிருத்தி என்கின்ற போர்வையில் தமிழ் மக்களை ஏமாற்றுகின்ற அனைத்து நடவடிக்கைகளும் தற்பொழுது இடம்பெறுகின்றது. எழும்புத் துண்டுகளுக்கு விலை போகின்ற தமிழ் கட்சிகளும், முஸ்லீம் கட்சிகளும் முப்பது ஆண்டுகளாக தமிழ் பேசும் மக்களுக்கு நடந்த அநீதிகளைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். மீண்டும் அதே அநீதி தமிழ் மக்கள் மீது தின்னிக்கப்படவிருக்கின்றது. என்பதனை அறிந்து செயற்படவேண்டும். காலத்துக்கு காலம் அரசாங்கம் தமிழ் மக்களுக்கு ஏமாற்றத்தையே தந்துள்ளன. இந்த ஏமாற்றத்தின் பின்னணியில் முதலாம் கட்ட ஈழப்போர் தொடக்கம் நான்காம் கட்ட ஈழப்போர் வரை தமிழ் இனத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிகள் ஏறாளம். கோடைகால அரசியல் என்பது இதயசுத்தியுடன் அரசாங்கம் செயற்படுகின்றது என்று பலரும் நினைக்கலாம். போரினால் பொருள்ச் சேதம், உயிர்ச் சேதம் ஏற்பட்டதை வன்னி மக்கள் ஒரு போதும் மறக்கமாட்டார்கள். இருந்தாலும் இதனை மீண்டுமொரு முறை ஞாபகப்படுத்தவேண்டியது எமது ஊடகத்தின் கடமையாகும்.

நல்லாட்சி அரசாங்கம் என்று கூறிக்கொண்டு சிங்களப் பெரும்பாண்மை இனத்தவருடைய சொற்களுக்கு ஆடிவருகின்ற இவ் அரசாங்கம் தமது அரசாங்கத்தின் ஸ்திர நிலையை ஏற்படுத்தும் வகையில் சிறுபாண்மைக் கட்சிகளுடைய வாக்கு வங்கிகளைப் பன்படுத்துகின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு அழிக்காமல் விட்டிருந்தால் பிரதமராக மகிந்த ராஜபக்ஷhவே வந்திருப்பார். நடு நிலமை வகித்திருந்தாலும் மகிந்த ராஜபக்ஷhவே வந்திருப்பார். ஒரு இனப்படுகொலையாளி மீண்டும் பிரதமராகி விடுகின்ற ஒரு வரலாற்றுத் தூரோகத்தை செய்து விடக்கூடாது என்பதில் இருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தப்பித்துக் கொண்டது என்பது தான் உண்மை. இதனை சாதகமாக்கிக் கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தமிழ் மக்களை இரட்சிக்க வந்த இறைதூதர் என்று தம்பட்டம் அடித்துக்கொண்டு கலத்தில் இறங்கியுள்ளார். தமிழ் மக்களுக்கான தீர்வுத்திட்டம் தொடர்பில் வடகிழக்கு இணைப்பு என்பது குறைந்த பட்சம் அவசியம். அதுவும் இல்லாது விடத்து தொடர்ந்தும் இவ் அரசாங்கத்துடன் நாம் ஒரு கூட்டுப் பயணத்தை ஏற்படுத்துவது என்பது ஆபத்தாகவே அமைந்து விடுகின்றது.

வன்னி நிலப்பரப்பை பொறுத்தவரையில் ஒருலட்சத்து நாற்பத்தாறாயிரம் மக்கள் கடத்தப்பட்டோ, காணாமல் ஆக்கப்பட்டோ, கொலைசெய்யப்பட்டோ இருக்கின்றார்கள். ஒரு இனமாகவோ குழுவாகவோ அழிக்கப்பட்டால் அது இனப்படுகொலை என்று சர்வதேச சட்டத்திற்கு அமைவாக ஐக்கிய நாடுகள் சபையில் எழுதப்பட்டிருக்கின்றது.
அது மட்டுமன்றி விசவாயு பயன்படுத்துதல், கட்டாயக் கருத்தடை, கட்டாய் மதமாற்றம் அடிப்படை மனித உரிமைகள் மீறல்கள், இனச்சுத்திகரிப்பு, மாற்றுத் திருமணமுறை, ஒரு இனத்தின் சட்டவிரோதக் குடியேற்றம் போன்றவை இனப்படுகொலையினுல் உள்ளடக்கப்படுகின்றது. ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் சித்திரவதை செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்டு இருக்கின்றார்கள். முப்பத்தைந்து ஊடகவியலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். அல்பட்துறையப்பா தொடக்கம் லக்மன் கதிர்காமர் வரை 175 அரசியல் புத்திஜீவிகள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். 242 தடவைகள் இனப்படுகொலைக்கு ஏதுவான சம்பவங்கள் அரசதரப்பினால் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.

இது இனப்படுகொலையா? அல்லது போர்க்குற்றமா? என்பதை சர்வதேச நீதிமன்றமே முடிவெடுக்கவேண்டும். இச் சம்பவங்களை மூடிமறைப்பதற்காகவே இவ் அரசாங்கம் தற்பொழுது உச்ச நீதிமன்றத்தில் ஒரு ஜனாதிபதி அவர்களால் பிறப்பிக்கப்பட்ட கட்டளையை பிழையென வாதிட்டு இலங்கை வரலாற்றில் மட்டுமல்ல உலக வரலாற்றிலும் இலங்கையில் நீதி நிலை நாட்டப்பட்டிருக்கின்றது என்பதை எடுத்து இயம்பும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சுமந்திரன் உட்பட அவர் சார்ந்த சட்டத்தரணிகளும் தமது வாதத் திறமையினால் வெற்றி வாகை சூடியுள்ளனர். இது ஒரு ஜனாதிபதியின் தீர்ப்புக்கு எதிராக இலங்கை வரலாற்றில் முதன் முதலாக நிகழ்த்தப்பட்ட ஒரு விடையம். இதனை அனைத்து தரப்பினரும் ஒப்புக்கொண்டுள்ளார்கள். காணமாக்கப்பட்டவர்கள் தொடர்பில் இதே முன்னெடுப்புக்களை ஏன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுக்கப்படக் கூடாது என்ற கேள்வி தமிழ் ஆயுதக்கட்சிகளால் முன்வைக்கப்படுகின்றது. இது இவர்களின் தவறான கருத்து. மாறாக இந்தக் கட்சிகள் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் ஏன் வழக்குத் தொடுக்க முடியாது அவ்வாறு வழக்குத் தாக்குதல்கள் செய்தால் இவ் ஆயுதக்கட்சிகளுடைய கொலைகளும் சட்டத்திற்கு முன் கொண்டுவரப்படும். ஆகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது சேரும் பூசும் நடவடிக்கைகளை இவர்கள் மேற்கொண்டிருக்கின்றார்கள். இவ் ஆயுதக்கட்சிகளின் பின்புலம் மகிந்த ராஜபக்ஷhவை மீண்டும் பிரதமர் ஆக்குவதே.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா அவர்கள் தான் குள்ளநரி என்பதை அடிக்கடி நிறுபித்து வருகின்றார். சிங்களப் பேரினவாத அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் தமிழ் மக்களை ஒரு எலியாக நினைக்கின்றார்கள். ஆனால் தமிழ் இனம் வீறுகொண்ட புலி என்பதை உணரும் காலம் வெகு காலமில்லை என்பதை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா அவர்களுக்கு தெரியப்படுத்தப்படவேண்டிய தேவை இருக்கின்றது.
தென்னிலங்கையில் ஏற்படுத்தப்பட்டிருக்கின்ற அரசியல் குழப்பங்களுக்கு தமிழ் அரசியல் தலைமைகள் குழப்பமடைய வேண்டிய தேவையில்லை. எம்மினத்திற்கான விடுதலை நோக்கிய காய்களை நாம் நகர்த்தவேண்டும். பிரதமர் ரணில் விக்கிரம சிங்காவைப் பொறுத்தவரையில் அவருடைய பார்வை என்பது தொலைநோக்குப் பார்வையென்பதேயாகும். சந்தர்ப்பம் பார்த்து அவ்விடத்தில் கழுத்தறுக்கும் அரசியலே அவரது அரசியல். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் முஸ்லீம் அரசியல் தலைமைகளுடைய ஆதரவுடன் மீண்டும் பிரதமராக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்கா அவர்கள் மீண்டும் ஒரு நம்பிக்கைத் துரோகத்தை செய்வதற்காகவே வடபகுதி விஜயத்தை மேற்கொண்டிருக்கின்றார். முக்கியம் தமிழ் மக்கள் தொடர்பான விடயங்களை பார்க்காத ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தமிழ் மக்களுக்கான தீர்வுத்திட்டத்தினை எந்தக்கட்டத்திலும் பெற்றுத்தரப்போவதில்லை என்பதே உறுதியான விடையம். சிங்கள மக்களுக்கு ஒரு கதையும், தமிழ் மக்களுக்கு ஒரு கதையுமே இவ்வளவு காலமும் மாறி மாறி வந்த அரசாங்கங்கள் தமது அரசியல் பயணத்தில் மேற்கொண்டிருந்தனர் என்பதே வரலாறு. தேர்தல் அரசியலைப் பயண்படுத்தி தமிழினத்தை ஏமாற்ற நினைக்கும் எந்த அரசியல் வாதிகளுக்கும் தமிழ் மக்கள் விலை போகக் கூடாது மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும் என்ற தியாகி திலீபனின் வாசகத்திற்கு அமைய தமிழினம் செயற்படவேண்டும். எந்த அரசாங்கம் வந்தாலும் நாம் எதிர்த்துப் போராடும் திறனைக் கொண்டவர்களாக மாற்றம் பெறவேண்டும்.

ரணில் விக்கிரமசிங்கவின் இந்த ராஜதந்திர வருகை என்பது வெள்ளத்தால் மக்களுக்கு நிவரணங்களை வழங்குவதாகவோ, அல்லது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதாகவோ இல்லை. முழுக்க முழுக்க அவரின் சுயலாப அரசியலையே இது எடுத்துக் காட்டுகின்றது. இவ்வருகை தமிழ் மக்களுக்கு என்ன செய்தியைச் சொல்லுகின்றது என்றால் நிதானம், அவதானம், எச்சரிக்கை என்பதே ஆகும்.

SHARE