பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை நேற்று வியாழக்கிழமை தம்மிடம் கையளிக்கப்பட்டதாக சபாநாயகர் சமல் ராஜபக்ஷ இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார். இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இராஜாங்க, பிரதி அமைச்சர்கள் என 100 இற்கும் மேற்பட்டார் கையெழுத்திட்டுள்ளனர் என மனுஷா நாணயக்கார எம்.பி. கூறினார். இதேவேளை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை விரைவில் கொண்டுவரப்படும் என எதிர்க்கட்சியினர் அண்மையில் தெரிவித்திருந்த குறிப்பிடத்தக்கது.