பிரதான மத நிகழ்வுகளுக்கு அரச அனுசரணை வழங்கத் தீர்மானம்

291
பிரதான மத நிகழ்வுகளுக்கு அரசாங்கத்தின் பூரண அனுசரணை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த யோசனையை முன்வைத்துள்ளார்.

இதன்படி, பிரதான மத நிகழ்வுகள் அனைத்தும் அரச அனுசரணையுடன் முன்னெடுக்கப்படும். மத நல்லிணக்கத்தை கருத்திற் கொண்டு சகல பிரதான மத நிகழ்வுகளும் அரச நிகழ்வுகளாக நடைபெறவுள்ளன.

பௌத்த, இந்து, கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய பிரதான மத நிகழ்வுகளுக்கு அரசாங்க அனுசரணை வழங்கப்பட உள்ளது.

இது தொடர்பிலான திட்டமொன்றை வகுக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளதாக அவரது செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும்நோக்கில் அரசாங்கம் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு சமாந்திரமாக மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட உள்ளன.

இதன்படி, வெசாக், பொசோன் பௌர்ணமி தினங்களைப் போன்றே, தீபாவளி, தைப்பொங்கல், நத்தார் பண்டிகை உள்ளிட்ட நிகழ்வுகளும் அரச அனுசரணையுடன் அரச நிகழ்வுகளாக எதிர்காலத்தில் நடாத்தப்பட உள்ளது.

SHARE