பிரதேச இளைஞர்களது ஒருமித்த ஒற்றுமையே அப்பிரதேசம் தன்னிறைவுக்கு வழிவகுக்கும்: கலையரசன்

593
ஒரு பிரதேசத்தில் உள்ள அனைத்து இளைஞர்களும் ஒருமித்து ஒரு குடையின் கீழ் இருந்து செயற்படுகின்ற போது அந்தப்பிரதேசமானது ஒரு தன்னிறைவு கண்ட பிரதேசமாக மாறி பல அபிவிருத்தி திட்டங்களை முன்னகர்த்தி கொண்டு செல்லக்கூடிய வாய்ப்பு ஏற்படும் என  கிழக்கு மாகாணசபை உறுப்பனர் தவராசா கலையரசன் கூறினார்.

சம்மாந்துறை தொகுதியின் தமிழரசுக்கட்சியின் புணநிர்மான கூட்டமானது அண்மையில் நடைபெற்று அங்கு எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக நேற்று மாலை சொறிக்கல்முனையில் இரண்டாவது கூட்டம் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் சம்மாந்துறை தொகுதியின் தமிழரசுக்கட்சியின் தலைவருமான தவராசா கலையரசன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு சொறிக்கல்முனை கிராமத்தில் உள்ள இலங்கை தமிழரசுக்கட்சியின் ஆதரவாளர்கள் உறுப்பினர்கள் அடிமட்ட தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய கிழக்கு மாகாணசபை உறுப்பினர், சம்மாந்துறை தொகுதியில் இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு தெரிவு செய்யப்பட்டு விட்டதுடன் எமது பணி முடிவடையாமல் இன்று அதன் ஒரு தொடர்சிசியாக இந்தக்கிராமத்திலே அடுத்தகட்ட பணிதொடர்பாக ஆராய்வதற்காக இக்கூட்டத்தினை கூட்டியிருக்கின்றோம் இதே போன்றுதான் எதிர்வரும் காலங்களிலும் ஏனைய கிராமங்களை மையப்படுத்தியும் ஆங்காங்கே சந்திப்புக்கள் நடைபெறும்.

இதற்கு அனைவரும் ஒன்று திரண்டு ஒரு குடையின் கீழ் இருந்து எமது மக்களின் பிரச்சனைகளுக்கு அவ்வப்போது தீர்வு கான்பவர்களாக அனைவரும் மாறவேண்டும்

எதிர்காலத்தில் மக்களுக்கான நல்ல சேவைகளை செய்வதற்கு அனைவரும் உத்வேகத்துடன் செயற்படுவதோடு எம்மிடையே பிரிவினையை ஏற்படுத்துகின்ற செயற்பாடுகளில் இறங்காமல் அனைவரும் தமிழ் மக்களுக்காகவேண்டி போராடி மடிந்த மாவீரர்களின் தியாகங்களை மனதில் கொண்டு மக்கள் சேவையினை செய்ய முன்வரவேண்டும்.

ஒவ்வொரு கிராமங்களையும் மையப்படுத்தியதாக எமது அரசியல் பயணம் செல்கின்றபோது அந்த பிரதேசத்தில் உள்ள மக்களின் பிரச்சனைகளை வகைபிரித்தறிந்து அவர்களது உடனடி தேவைகள் எவை என்று இனங்கண்டு அவர்களுக்குரிய பரிகாரங்களை செய்ய அனைவரும் முன்வரவேண்டும்.

கடந்தகாலங்களில் இந்தப்பிரதேசத்தில் பல கோணங்களில் பல பிரச்சனைகளுக்கு முகங்கொடுக்கக்கூடியதாக இருந்தது இனால் அந்த நிலை தற்போது மாறி இந்தப்பிரதேசத்தினை பொறுத்தவரையில் ஒரு சுமூகமான நிலையே காணப்படுகின்றது.

இதனை கற்றறிந்த சமூகம் சரியான முறையில் பயன்படுத்த முயல வேண்டும் இவ்வாறு முயற்சிக்கும் போதுதான் எமது உரிமைகளை நேர்மையான வழியில் பெற்றுக்கொள்ள முடியும் இதற்கு இந்தப்பிரதேசத்தில் உள்ள ஒட்டுமொத்த இளைஞர்களும் ஒன்று பட்டு செயற்பட்டு வெற்றியும் காணவேண்டும் எனவும் கூறினார்.

SHARE