தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் மட்டக்களப்பிலுள்ள 4 பிரதேச செயலகப் பிரிவுகளின் ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கப்பட்டுள்ள இந்த நியமனத்தின்படி மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று- செங்கலடி, ஏறாவூர் நகர், பட்டிப்பளை, கிரான் ஆகிய 4 பிரதேச செயலகப் பிரிவுகளின் ஒருங்கிணைப்புக்குழு இணைத் தலைவராக இவர் பணியாற்றுவார்.