பிரதேச சபை ஒருங்கிணைப்பு கூட்டங்களின் போது பெண்களினுடைய எண்ணிக்கை மிக மிக குறைவாக இருக்கின்றது-நாடாளுமன்ற உறுப்பினர். ஈ.சரவணபவன்

249

 

பிரதேச சபை ஒருங்கிணைப்பு கூட்டங்களின் போது பெண்களினுடைய எண்ணிக்கை மிக மிக குறைவாக இருக்கின்றது, அது அதிகரிக்கப்பட் வேண்டும், இதற்கு பெண்கள் முன்வந்து பொறுப்புக்களை பெற்று கொள்ள வேண்டும்,

இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர். ஈ.சரவணபவன் தெரிவித்தார்.

 

14192574_1195311597174825_5961614743029722327_n 14225618_1195311607174824_1572806350645646389_n 14237746_1195311693841482_5074577462453542338_n

தேர்தல்கள் வரும்போது கூடதலாக வாக்களிக்கும் பெண்கள், அதில் பங்கு கொள்பவர்களாகவும் மாற வேண்டும். எனவும் அவர் தெரிவித்தார்.

மானிப்பாய் பிரதேச சபை மண்டபத்தில் இடம் பெற்ற செல்வா மிஷன் செயற்ப்பாட்டினுள் கிராம ரீதியாக ஆரம்பிக்கப்பட்ட மகளிர் மற்றும் சிறுவர் மேம்பாட்டிற்க்கான 18 வது வருட நிறைவு தினம், 25 வருடங்களுக்கு மேல் சேவையை வளங்கிய முன்பள்ளி ஆசிரியர்களின் 18 ஆவது கௌரவிப்பு, நிகழ்வில் விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ஐக்கிய நாடுகள் சபையில் 50 வீதம் பெண்களின் பங்குபற்றுதலுக்கு வாய்பளிக்கப்பட்டுள்ளது. அதே போல் இலங்கையிலும் பெண்கள் உள்வாங்கப்பட வேண்டும். இலங்கை நாமன்றத்தில் பல வாத பிரதி வாதங்களுக்கு மத்தியில் 25 வீதமான பெண்களை உள்வாங்க வேண்டும் என தற்போது சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தை பெண்கள் சாதகமாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். இது மிக முக்கியம். பெண்கள் எதையும் கண்டு ஒதுங்கி போக கூடாது. தலைமை தாங்குவதற்கு தாமாகவே முன் வந்து தலைமைத்துவத்தை ஏற்க்க வேண்டும், எல்லா இடங்களிலும் பெண்களின் ஆளுமைகளை புரிந்து கொண்டு அவர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர். எமது கலாசாரத்தின் நிமித்தம், பெண்கள் இவற்றை எல்லாம் விட்டு ஒதுங்கி இருந்தார்கள். தேர்தல்கள் வரும்போது பெண்கள் தான் கூடதலாக வாக்களிக்கின்றார்கள், ஆனால் அவர்களுடைய பங்கு பற்றல் குறைவாக உள்ளது. அவர்கள் நேரடியாக பங்குபற்ற வேண்டும்.

பிரதேச சபை ஒருங்கிணைப்பு கூட்டங்கள் இடம்பெறும் போது அங்கு பெண்களினுடைய எண்ணிக்கை மிக மிக குறைவாக இருக்கின்றது, அதிகாரிகள் பெண்களாக இருந்தாலே தவிர, கூட்டத்திற்கு பெண்களுடைய வரவு குறைவாகவே உள்ளது. நீங்கள் உங்களுடைய ஊரில் உங்களுடைய அமைப்புகளில் இருந்து அபிவிருத்தியை மேற்கொள்வதற்கு உங்களுடைய பங்களிப்பு கட்டாயம் தேவை. எத்தனையோ பிரச்சினைகள் உங்களுக்கு உண்டு, அவற்றையும் தாண்டி நீங்கள் சமூகச் செய்ற்பாடுகளில் முன்னுக்கு வர வேண்டும். பெண்கள் தலைமை தாங்க தாமாகவே முன் வந்து தலைமைத்துவத்தை ஏற்க்க வேண்டும், எதிர் வரும்காலத்தில் இப் பெண்கள் தலைமைத்துவத்தில் பங்குகொண்டு நிர்வாக செற்பாடுகளிலும் பங்கெடுக்க வேண்டும். என்றார்.

இந் நிகழ்வில் கலந்து கொண்ட அவர் கலை நிகழ்சிகளை வளங்கிய கலைஞர்கள், முன்பள்ளி ஆசிரியர்கள், மகளிர் சங்க பிரதிநிதிகள் ஆகியோருக்கு ஆசிகளையும் பாராட்டுதல்களையும் வளங்கியதுடன். முன்பள்ளி ஆசிரியர்களுக்கான கௌரவிப்பு மற்றும் பரிசில்களையும் வளங்கி வைத்தார்.

SHARE