காங்கிரஸ் எம்.எல்.ஏ ஒருவரின் மகனை தனுஷ் திரைப்பட நாயகி மணம் புரிய உள்ள செய்தி வெளியாகியுள்ளது.
நடிகர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான நெஞ்சில் துணிவிருந்தால் படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் மெஹ்ரீன் பிர்சாதா. பின்னர் விஜய் தேவரகொண்டா நடித்த நோட்டா, தனுஷ் நடித்த பட்டாஸ் ஆகிய படங்களில் நாயகியாக நடித்திருந்தார்.
இந்நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஒருவரின் மகனை மெஹ்ரீன் பிர்சாதா மணம் புரிய உள்ள செய்தி வெளியாகியுள்ளது.
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் மூன்று முறை ஹரியாணா மாநில முதல்வராக இருந்தவர் பஜன் லால். இவரது மகன் குல்தீப் பிஷ்னோய் ஹரியாணா மாநிலத்தின் அதம்பூர் தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏ ஆக இருக்கிறார். இவரது மகன் பாவ்யா பிஷ்னோய் உடன்தான் மெஹ்ரீனுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. பாவ்யா பிஷ்னோய்யும் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். என்பது குறிப்பிடத்தக்கது.
மெஹ்ரீன் – பாவ்யா பிஷ்னோய் தம்பதியினரின் திருமண நிச்சயதார்த்தம் மார்ச் 12-ம் தேதி ஜெய்ப்பூரில் நடைபெறவுள்ளது என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.