பிரபல இயக்குனர் சிராஜ் திடீர் மரணம்

229

என்ன பெத்த ராசா, ஊரெல்லாம் உன்பாட்டு, என் ராஜாங்கம் போன்ற படங்களை இயக்கியவர் சிராஜ். இவர் நேற்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.

65 வயதான இவர் சேத்துபட்டிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். சிராஜிற்கு ஆயிஷா என்ற மனைவியும் 3 மகள்களும் உள்ளனர்.

இயக்குனர் சிராஜ் அவர்களின் உடல் அடக்கம் நாளை மாலை சென்னையில் நடைபெற உள்ளது. இயக்குனர் சிராஜை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு சினிஉலகம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது.

SHARE