பிரபல தடகள வீரரின் மகள் சுட்டுக் கொலை

206

அமெரிக்க தடகள வீரர் டைசன் கே-வின் 15 வயது மகள் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவை சேர்ந்த பிரபல தடகள வீரர் டைசன் கே. இவர் ஒலிம்பிக் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச போட்டிகளில் 100 மீற்றர் ஓட்டப் பந்தயத்தில் சாதனை பல புரிந்துள்ளார்.

இந்நிலையில் தடகள வீரர் கே-வின் 15 வயது மகள் அமெரிக்காவின் கெண்டக்கியில் இன்று சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக லெஸிங்டன் பொலிஸார் கூறுகையில், உணவு விடுதி ஒன்றில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் கே-வின் மகள் டிரினிடி கழுத்தில் குண்டடிப்பட்டது என்று தெரிவித்தனர்.

பின்னர் குண்டடிபட்ட நிலையில் டிரினிடி கே அங்கிருந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

இதனைடையே தனது மகள் டிரினிடி துப்பாக்கி குண்டடிப்பட்டு உயிரிழந்ததை டைசன் கே தொலைக்காட்சி மூலம் உறுதி செய்துள்ளார்.

டிரினிடி உயிரிழந்த சம்பவத்தை கேள்வியுற்ற விளையாட்டு பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் தங்கள் ஆதரவையும் அதிர்ச்சியையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

625-0-560-320-500-400-194-800-668-160-90

SHARE