பிரபல தமிழ் நாயகியை பாராட்டிய பாலிவுட் நடிகர் சல்மான் கான்

223

சினிமாவில் பல மொழிகளில் வெற்றி படங்களை கொடுத்து இவ்வருடம் தன்னுடைய 50வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார் நடிகை ஸ்ரீதேவி.

தன்னுடைய 300வது படமான Mom என்ற படத்தில் இவர் நடித்து வருகிறார். ஜுலை 14ம் தேதி வெளியாக இருக்கும் இப்படத்தின் பஸ்ட் லுக் அண்மையில் வெளியாகி இருந்தது.

பாலிவுட் பிரபலங்களான அபிமன்யூ, அக்ஷய் கண்ணா, நவாசுதீன் ஆகியோர் சிறப்பு வேடத்தில் நடிக்கும் இப்படத்தை ரவி உதயவர் இயக்க ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.

இப்படம் குறித்து அண்மையில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் பேசும்போது, நான், ஷாருக்கான், அக்ஷய் குமார், அமீர்கான் என யாரும் 300 படங்கள் நடிக்கவில்லை. ஆனால் ஸ்ரீதேவி தனி ஆளாக 300 படங்கள் நடித்திருக்கிறார். இது மிகப்பெரிய சாதனை என பேட்டியளித்துள்ளார்.

SHARE