பிரபல தொகுப்பாளர் ரக்ஷனுக்காக முன்வந்த பிரபல நடிகர்கள்- என்ன செய்திருக்கிறார்கள் தெரியுமா?

167

பலரை போல இல்லாமல் நிறைய கஷ்டங்களுக்கு பிறகு தற்போது முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் சேதுபதி. இவரது படங்கள் என்றாலே அப்படத்திற்கு தனி வரவேற்பு கிடைக்கும்.

இவரை பற்றியும் இவர் செய்த உதவி குறித்தும் ஒரு பேட்டியில் பேசியுள்ளார் தொகுப்பாளர் ரக்ஷன். ஒரு நாள் நடிகர் விஜய் சேதுபதி அவர்களை பார்த்து எனக்கு படத்தில் நடிக்க வேண்டும், ஆசையாக இருக்கிறது என்று கூறினேன்.

அதை கேட்டுக் கொண்ட விஜய் சேதுபதி ஒரு நாள் திடீரென்று போன் செய்து கவண் படப்பிடிப்பிற்கு அழைத்து படம் என்றால் எப்படி உருவாகும் என்ற ஒவ்வொரு விஷயத்தையும் சொல்லிக் கொடுத்தார். ஒருநாள் முழுவதும் எனக்கு நிறைய விஷயங்களை கத்துக் கொடுத்தார் என்றார்.

அதேபோல் சிவகார்த்திகேயன் மற்றும் சிம்பு ஆகியோர் போன் செய்து தனக்கு பாராட்டு தெரிவித்திருக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.

SHARE