சமீபத்தில் பிரபல தொலைக்காட்சியில் நடைபெற்ற நடன நிகழ்ச்சியில் தாடி பாலாஜியும், அவர் மனைவி நித்யாவும் கலந்துகொண்டு வாக்குவாதம் செய்த காட்சி பார்வையாளர்களை அதிர்ச்சியடைய வைத்தது.
ஆனால், இது உண்மையில் நடைபெற்ற வாக்குவாதம் அல்ல. தொலைக்காட்சி பிரபலம் அடைய வேண்டும் மற்றும தாங்கள் பிரபலம் அடைய வேண்டும் என்பதற்காக அவர்கள் இவ்வாறு நடந்துகொண்டார்கள்.
அந்த நிகழ்ச்சியி நடந்தாவது, எனது மனைவியை அடித்திருக்கிறேன், திட்டியிருக்கிறேன். அதற்காக அவளிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என பாலாஜி கூறினார்.
மற்றவர்களை சிரிக்க வைத்துவிட்டு, என்னை மட்டும் அழவைத்தார் என அவரது மனைவி கதறி அழுதார். இந்த சம்பவம் நடுவர்களை மட்டுமல்லாமல், நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்ட போது அதனை பார்த்த பார்வையாளர்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
ஆனால், இதெல்லாம் நிகழ்ச்சிக்காக நடந்த கலாட்டா. ஆனால் நிஜத்தில் அப்படியல்ல, நாங்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். எங்கள் குடும்பம் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது என வெளிப்படையாக கூறியுள்ளார்.
இதற்கு முன்னர், இதோ தொலைக்காட்சியில் நடிகர் சிம்புவும், ப்ரித்வி ராஜம் சண்டைபோட்ட காட்சி வெளியாக ரசிர்களை அதிர்ச்சியடைய வைத்தது. ஆனால் இதெல்லாம் தொலைக்காட்சியின் டிஆர்பி ரேட்டிங்கை எகிற வைக்க போட்ட நாடகம் என்பது பின்னர் தான் தெரியவந்தது.
– See more at: http://www.manithan.com/news/20170109124158#sthash.A2cm2Rlh.dpuf