பிரபல நடிகரால் தான் நான் திருமணம் செய்யவில்லை! உண்மையை உளறிய தபு

168

அஜித்துடன் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்திலும், அப்பாஸ் மற்றும் வினித்துடன் காதல் தேசம் படத்திலும் நடித்தவர் நடிகை தபு. பாலிவுட் சினிமாவின் பிரபலபான இவர் 45 வயதை தாண்டினாலும் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை.

சமீபத்தில் மும்பையில் நடந்த டிவி ஷோவில் கலந்து கொண்ட இவரிடம், தொகுப்பாளர் நீங்கள் ஏன் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை என கேட்டார்.

நான் திருமணம் செய்யாததற்கு நடிகர் அஜய் தேவ்கன் தான் காரணம். அவர் என் மிக நெருங்கிய உறவினரின் நண்பர். என் வாழ்வில் ஆரம்பத்தில் இருந்தே அவர் என்னுடன் ஒன்றாக இருந்துள்ளார்.

இருவரும் அடிக்கடி வெளியே செல்வோம். என் உணர்வுகள் அவருக்கு புரியும்.யாராவது என்னை கிண்டல் செய்தால் அவருக்கு கோபம் வரும் என தபு கூறியுள்ளார்.

அஜய் பிரபல நடிகையான கஜோலின் கணவர். அவர்களுக்கு 2 குழந்தைகள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE