விஜய் எப்போதுமே மற்றவர்களை பாராட்டுவதில் தயக்கமே காட்ட மாட்டார். தன்னுடைய படங்களில் நடித்தவர்களுக்கு பிறந்தநாள் வந்தாலோ, வேறு ஏதாவது சந்தோஷமான நிகழ்வு நடந்தாலோ உடனே அவர்களுக்கு போன் செய்து பாராட்டி விடுவார்.
அந்த வகையில் விஜய், இன்று பிறந்தநாள் கொண்டாடும் பாடலாசிரியரும், நடிகருமான அருண்ராஜாவிற்கு போன் செய்து வாழ்த்து கூறியுள்ளார். இந்த தகவலை அருண்ராஜா அவர்களே தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.