பிரபல நடிகர் இயக்கிய ஜெயஹே பாடல் – ஓட்டு உங்கள் உரிமை

276

நமது மக்கள் பலரும் அரசியல்வாதிகள் மீது குறை சொல்லுவதில் காட்டும் அக்கறையை அதை சரிப்படுத்துவதில் பெரும்பாலும் காட்டுவதில்லை. நல்ல அரசியல்வாதிகளை தேர்ந்தெடுப்பதில் மக்கள் கவனமாக இருக்க வேண்டும். சில இளைஞர்கள் ஓட்டுப்போடுவதற்கு முன்னுரிமை கொடுக்காமல் அந்த நேரத்தில் திரைப்படங்கள் செல்லுவதற்குதான் கொடுக்கின்றனர்.

ஒரு முறை சரியானவர்களை தேர்ந்தெடுக்க தவறினால் 5 வருடம் கஷ்டப்பட்டுத்தான் இருக்க வேண்டும்.வரும் தேர்தலில் நமது ஓட்டுரிமையை யாருக்காகவும் விட்டுத்தராமல் ஓட்டளித்து சரியான வேட்பாளர்களை, இளைஞர்களை தேரந்தெடுக்க வேண்டும் என்பதை முன்னிருத்தி ஜெயஹே என்ற பெயரில் ஒரு பாடல் நாளை மறுநாள் வெளியாகவுள்ளது.

ராஜா ராணி மற்றும் மான் காரத்தே படத்தின் மூலம் அறியப்பட்ட நடிகர்அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், வில்அம்பு படத்தின் இசைமைப்பாளர் நவீன் சந்தர் புல்லாங்குழலில்.., ஊ படத்தின் இசையமைப்பாளர் அபிஜித் ராமசாமி இசையில் இப்பாடல் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE