மணிவண்ணன் இயக்கத்தில் 1990ல் வெளிவந்த சந்தனக்காற்று படம் மூலம் வில்லனாகத் திரையுலகில் நடிக்க வந்தவர் விச்சு விஸ்வநாத்.
இவரை முதலில் பார்த்தவுடன் இவர் வில்லனாக நடித்த படங்கள் தான் முதலில் நியாபகம் வரும், இவர் குணச்சித்திரம் மற்றும் காமெடி வேடங்களிலும நடித்துள்ளார்.
இதுவரை 130க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள விச்சு, பிரபல இயக்குனர் சுந்தர் சியின் நெருங்கிய நண்பர்.
மகளின் திருமணம்
இந்த நிலையில் விச்சுவின் மகள் கோகிலா திருமணம் குறித்து தகவல்கள் வந்துள்ளன. அவரது மகள் கோகிலாவிற்கும், ஜெர்மனியில் பணியாற்றி வரும் ஸ்ரீகாந்த் என்பவருக்கும் திருமணம் நடக்க இருக்கிறதாம்.
இவர்களது திருமணம் வரும் நவம்பர் 23ம் தேதி நடைபெற உள்ளது.