ஜெயிலர் வெற்றிக்குப்பின் ரஜினியின் மார்க்கெட் மாபெரும் உச்சத்தை தொட்டுள்ளது. இதனால் தன்னுடைய அடுத்த படத்திற்கு ரஜினிகாந்த் ரூ. 220 கோடி கூட சம்பளம் வாங்க வாய்ப்பு உள்ளது என பேசப்படுகிறது.
ஆனால், அது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. ரஜினி பற்றி நமக்கு தெரியாத பல விஷயங்களை அவருடன் நடந்துவர்கள், அல்லது பழகியவர்கள் பேட்டிகளில் கூறும்போது பார்த்து தெரிந்துகொள்வோம்.
அந்த வகையில் பிரபல நடிகை ராதிகா ரஜினிக்கும் தனக்கும் இடையே நடந்த சம்பவம் குறித்து பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
பயந்து நடுங்கும் ரஜினிகாந்த்
இதில் ‘ஒரு முறை ரஜினியை சந்திக்கும் போது அவர் ரப்பர் செருப்பு ஒன்றை அணிந்து இருந்தார். நான் கேட்டான் சூப்பர் ஸ்டார் தானே என்னது இது ரப்பர் செருப்பு என்று. அன்றிலிருந்து என்னை பார்த்தவுடன் அவர் பயந்து முதலில் அவருடைய காலில் என்ன அணிந்து இருக்கிறோம் என்று தான் பார்ப்பார்’ என நகைச்சுவையாக நடந்த சம்பவம் குறித்து பகிர்ந்துகொண்டார். இந்த விஷயம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.