விஜய் நடித்த தமிழன் படத்தில் ஹீரோயினாக நடித்தவர் பிரியங்கா சோப்ரா. இவர் பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகை. அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் இவரும் ஒருவர்.
அவர் அண்மையில் வங்கி மோசடியில் ஈடுபட்ட நீரவ் மோடி மீது வழக்கு பதிவு செய்துள்ளார். நீரவ் நடத்தி வரும் வைர நகை ஜுவல்லரிக்கு கடந்த 2017 ஜனவரி முதல் பிரியங்கா விளம்பர தூவராக பணியாற்றியுள்ளார்.
மோசடி கும்பல் என தெரிந்ததும் அவர்களுடனான தொடர்பை நிறுத்தியுள்ளார். நிலுவையில் உள்ள தனக்கு வரவேண்டிய சம்பள தொகையை உடனடியாக கேட்டு மனு கொடுத்துள்ளார்.
இவர் மட்டுமல்ல சித்தார்த் மல்ஹோத்ரா, லிசா ஹைடன் என பலர் இதில் மாட்டிக்கொண்டுள்ளனர்.