பிரபல நாட்டின் பெண் பிரதமர் ஒருவரின் ஆபாச வீடியோக்கள்! வெளிவந்த உண்மைகள்

106

 

இத்தாலி பெண் பிரதமர் ஜார்ஜியா மெலோனியின் டீப்பேக் வீடியோக்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இத்தாலி பெண் பிரதமர் ஜார்ஜியா மெலோனியின் முகத்தை, ஆபாச திரைப்படத்தில் உள்ள நடிகையின் உடலுடன் பொருத்தி ஆபாச வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்ததாக தெரிகிறது.

குறித்த வீடியோக்கள் வைரலான நிலையில், அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் 40 வயது நிரம்பிய நபர் மற்றும் அவரது தந்தை ஆகியோர் இந்த வீடியோக்களை தயாரித்து வலைத்தளத்தில் பதிவேற்றியது தெரியவந்துள்ளது.

அவர்கள் மீது அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.

இத்தாலி பெண் பிரதமர் ஜார்ஜியா மெலோனி சம்பந்தப்பட்ட ஆபாச வீடியோக்கள் அனைத்தும், 2022ல் அவர் பிரதமராக பதவியேற்பதற்கு முன்பு பதிவேற்றம் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE