பல்வேறு நிறுவனங்கள் ஸ்மார்ட் தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி கடிகாரங்களை வடிவமைத்து வருகின்றன.
இவற்றுள் Fossil Group எனும் நிறுவனம் சற்று வித்தியாசமான ஸ்மார்ட் தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி ஸ்மார்ட் கடிகாரங்களை வடிவமைத்து வருகின்றது.
இந்நிலையில் குறித்த நிறுவனத்தின் தொழில்நுட்பத்தினை கூகுள் நிறுவனம் வாங்க முடிவு செய்துள்ளது.
இதற்காக இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் முடிவில் 40 மில்லியன் டொலர்களுக்கு பேரம் பேசப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும் இந்த தகவலை கூகுள் நிறுவனம் உத்தியோகபூர்வமாக இதுவரை வெளியிடவில்லை.