பிரபல பாடகர் ஷங்கர் மகாதேவனின் மகனை பாடகராக அறிமுகம் செய்யும் பிரபல இசையமைப்பாளர்

172
ஷங்கர் மகாதேவனின் மகனை பாடகராக்கிய இமான்

மகனுடன் ஷங்கர் மகாதேவன்
விஜய் சேதுபதி நடித்த றெக்க படத்தின் இயக்குனர் ரத்ன சிவா அடுத்ததாக இயக்கும் படம் ‘சீறு’. ஜீவா நாயகனாக நடித்து வரும் இப்படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷ்னல் நிறுவனம் சார்பில் ஐசரி கணேசன் தயாரிக்கிறார். காதல், ஆக்‌ஷன் கலந்த கமெர்ஷியல் படமாக தயாராகும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.
ஷங்கர் மகாதேவனின் மகனுடன் டி.இமான் இந்நிலையில், இந்த படத்தின் மூலம் பிரபல பாடகர் ஷங்கர் மகாதேவனின் மகன் சிவம் மகாதேவனை பாடகராக அறிமுகம் செய்துள்ளார் இமான். ஷங்கர் மகாதேவனின் மகனை பாடகராக அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி. அவர் பாடிய பாடல் மிகப் பிரமாதமாக வந்துள்ளதாக இமான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பாடலை விவேகா எழுதியுள்ளார்.
SHARE