பிரபல மாடல் அழகி மரண வழக்கில் நடிகர் கைது

215

தொகுப்பாளினி சோனிகா சவுகான், தொலைக்காட்சி நடிகர் விக்ரம் சாட்டர்ஜி ஆகியோர் கடந்த ஏப்ரல் மாதம் 29ம் தேதி இரவு காரில் பயணம் செய்துள்ளனர். அப்போது அவர்களுடைய கார் விபத்துக்குள்ளாகி சோனிகா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விக்ரம் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதோடு சோனிகாவின் பெற்றோர் விக்ரம் குடித்துவிட்டு காரை ஓட்டி தனது மகளை கொன்றுவிட்டதாக கூறினர், ஆனால் விக்ரம் தரப்பு அந்த தகவலை மறுத்தனர்.

இந்நிலையில் விபத்து நடந்த இரவு விக்ரமும், சோனிகாவும் இரண்டு கிளப்புகளுக்கு சென்றுள்ளனராம். அங்கு விக்ரம் குடித்த போது எடுத்த புகைப்படங்களும், வீடியோவும் வெளியாகியுள்ளது.

இந்த தகவலை பதிவு செய்த போலீசார், கொல்கத்தாவில் உள்ள அக்ரோபோலிஸ் மாலுக்கு வெளியே வைத்து நேற்று இரவு விக்ரம் சாட்டர்ஜியை கைது செய்தனர்.

SHARE