பிரபல வீராங்கனையால் சர்ச்சையில் சிக்கிய விராட் கோஹ்லி: வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

164

இந்திய அணியின் கேப்டன் விராட்கோஹ்லி வளர்ந்து வரும் டென்னிஸ் வீராங்கனை கர்மன் கவுரால் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

இந்திய அணியின் கேப்டன் விராட்கோஹ்லி தன்னுடைய அசாத்தியமான ஆட்டத்தினால் இளைஞர்கள் பலரிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்

ஆனால் இந்த முறை வேறு ஒரு தாக்கமானது இளைஞர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

சமீபத்தில் கைக்கடிகார நிறுவனம் ஒன்று பந்த்ராவில் உள்ளக 5 நட்சத்திர ஹோட்டலில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. அதில் இந்திய கேப்டன் விராட்கோஹ்லி, அவருடன் வளர்ந்து வரும் டென்னிஸ் வீராங்கனை கர்மன் கவுர் தண்டி, கூடைப்பந்து வீரர் சட்னம் சிங், ஆடில் பேடி, சிவானி கட்டாரியா ஆகியோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியின் போது 6 அடி 2 அங்குலம் உயரம் கொண்ட கர்மன் கவுர் விராட்கோஹ்லியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். 5 அடி 9 அங்குலம் மட்டுமே உயரம் கொண்ட விராட்கோஹ்லி புகைப்படத்தின் போது உயரமாக இருக்க வேண்டும் என்பதற்காக சிறிய வகையிலான ஸ்டூல் போட்டு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

இந்த புகைப்படம் இணையத்தில் வெளியானதை அடுத்து, ஆண்கள் எப்பொழுதுமே பெண்களை விட உயரமாகத்தான் இருக்க வேண்டுமா என்ன? என கேள்வி எழுப்பி விராட்கோஹ்லியை வறுத்தெடுத்து வருகின்றனர்.

SHARE