பாகிஸ்தானில் கைபர் பக்துங்க்வா மாகாணம் பெஷாவர் நகரில் தொடக்க பாடசாலை ஒன்று நேற்றைய தினம் வழக்கம்போல் நடைபெற்று கொண்டிருந்தன.
இதன்போது, திடீரென அந்த பாடசாலை அருகே பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதனால் அங்கிருந்தவர்கள் பயத்தில் அலறியடித்துக்கொண்டு ஓடினர்.
இந்த தாக்குதலில் 4 மாணவர்கள் உள்பட 7 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. மீட்பு படையினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இது தொடர்பில் பொலிஸார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.