தமிழ் சினிமாவில் தற்போது ஒரு படத்தில் இரண்டு நடிகர்கள் சேர்ந்து நடிப்பது சாதாரணமாகி கொண்டு வருகின்றது. இந்நிலையில் ஹாலிவுட்டில் மாபெரும் வரவேற்பு பெற்ற ‘வாரியர்’ என்ற படத்தை தமிழில் ரீமேக் செய்யவுள்ளதாக ஒரு பேச்சு அடிப்படுகின்றது.
இதில் விக்ரம், சூர்யா, கார்த்தி ஆகிய மூவரையும் நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும், விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரும் என கூறப்படுகின்றது.
ஏற்கனவே பாலா இயக்கத்தில் சூர்யா, விக்ரம் பிதாமகன் படத்தில் இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது,