பிரபாகரனின் பிராடோ வாகனம் சிக்கியது முக்கிய இராணுவ அதிகாரியிடம்….?

317

விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் பயன்படுத்திய புத்தம்புதிய பிராடோ வாகனத்தை, சிறிலங்கா இராணுவ அதிகாரி ஒருவர் பயன்படுத்திய விவகாரம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

மீரிஹானவில் அண்மையில் சிறிலங்கா இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்டு வந்த இலக்கத்தகடு மாற்றப்பட்ட வெள்ளை வான் ஒன்று கைப்பற்றப்பட்டதையடுத்து சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு மேற்கொண்ட விசாரணைகளின் போதே இந்த விவகாரம் அம்பலமாகியுள்ளது.

விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட வாகனங்கள் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பயங்கரவாத தடைச்சட்ட நடைமுறைகளின் படி, சிறிலங்கா படையினர் வாகனங்களை மோட்டார் வாகனத் திணைக்களத்திடம் ஒப்படைத்து, பதிவு செய்த பின்னரே மீளப் பெற்றுக் கொள்ள முடியும்.

ஆனால், விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட வாகனங்கள் இவ்வாறு முறைப்படி பதிவு செய்யப்பட்டுள்ளனவா என்று விசாரணைகள் நடத்தப்படுகின்றன.

இந்த விசாரணைகளின் போதே விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் பயன்படுத்திய புத்தம்புதிய பிராடோ வாகனத்தை, சிறிலங்கா இராணுவ அதிகாரி ஒருவர் பயன்படுத்திய விவகாரம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

இந்த விசாரணைகளை அடுத்து, சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் பலர் குழப்பமடைந்துள்ளனர்.

SHARE