பிரபாகரன் ஆயுதங்களுடன் நாட்டை பிரிக்க முயற்சித்தார் விமல் அதனை வார்த்தைகளின் ஊடாக செய்கின்றார்:

212

வேலுப்பிள்ளை பிரபாகரன் படையணி மற்றும் ஆயுதங்களைக் கொண்டு நாட்டை பிளவுபடுத்த முயற்சித்தார் எனவும், அதே காரியத்தை வார்த்தைகளின் ஊடாகவும் பிரச்சாரங்களின் ஊடாகவும் ஜே.என்.பி.யின் தலைவர் விமல் வீரவன்ச மேற்கொண்டு வருவதாக அமைச்சர் ஹரிசன் குற்றம் சுமத்தியுள்ளார்.

அண்மையில் விஹாரமஹாதேவி பூங்காவில் விமல்வீரவன்ச, தினேஸ் குணவர்தன உள்ளட்ட மஹிந்த ஆதரவு தரப்பு கூட்டம் நடத்தி கலப்பு நீதிமன்றத்திற்கு எதிராக விமர்சனங்களை வெளியிட்டிருந்தன என அவர் தெரிவித்துள்ளார்.

கலப்பு என்ற வார்த்தையை உலகிற்கு தெளிவுபடுத்துவதே இந்த கூட்டத்தின் பிரதான இலக்காக அமைந்திருந்தது என அவர் தெரிவித்துள்ளார்.
கலப்பு என்ற சொல்லுக்கு உலக விளக்கம் பெற்றுக் கொள்ள முன்னர் தனது மனைவி சசீ வீரவன்சவின் கலப்பு அடையாள பற்றி விமல் வீரவன்ச தெரிந்துகொள்ள வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேசிய அரசாங்கமொன்றை அமைக்கும் நோக்கில் ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.

விமல் வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் தினேஸ் குணவர்தன போன்றவர்கள் என்ன காரணத்திற்காக ஒன்றிணைந்து கூட்டணி அமைத்திருக்கார்கள் என்பதன் தாற்பரியம் தமக்கு புரியவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஸ ஆட்சிக் காலத்தில் ஊடக சுதந்திரம் காணப்பட்டதாகவும் தற்போது அவ்வாறு இல்லை எனவும் சிலர் பிரச்சாரம் செய்து வருவதாகவும் அவர்தெரிவித்துள்ளார்.

சிரச தொலைக்காட்சி எரிக்கப்பட்டமை, சியத்த ஊடகம் தாக்கப்பட்டமை, பிரகீத் எக்நெலிகொட கடத்தப்பட்டமை, லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டமை உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் மஹிந்த ராஜபக்ஸ ஆட்சிக்காலத்தில் நடைபெற்றவை என அவர் தெரிவித்துள்ளார்.

தாஜூடீன் கொலை, லசந்த கொலை மற்றும் பிரகீத் எக்நெலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பில் எவ்வாறான விசாரணை நடத்தப்படுகின்றது என்பது பற்றி மக்கள் கவனித்து வருகின்றார்கள், எனவே அரசாங்கம் துரித கதியில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

SHARE