பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா? மைத்திரி அரசு குழப்பத்தில் கருணா கேபியிடம் விசாரனை செய்யப்படலாம்

889

 

சென்ற வாரம் என்னைச் சந்தித்த வழக்கறிஞர் நண்பர் கல்விச்செல்வன்  ஒரு கேள்வியை கேட்டார். பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா? இல்லையா என்று.

இது போன்ற சந்தேகம் பலருக்கு இன்னும் இருக்கிறது. இத்தனைக்கும் அந்த நண்பர் தொடர்ந்து பல பத்திரிக்கைகளை படிப்பவர். சற்று விவரமானவர் கூட. இருப்பினும் இது போன்றவர்களுக்குக் கூட பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா? இல்லையா? என்ற கொஞ்சமேனும் சந்தேகம் எழுவதற்கான காரணம் ஏற்கனவே, அவர் இரண்டு முறை கொல்லப்பட்டதாக சொல்லப்பட்டாலும் அந்த செய்தி உண்மையல்லாமல் போனதும் ஒரு காரணமாகும். உண்மையில் அவர் கொல்லப் படவேண்டும் என்று விரும்பிய இந்திய அமைதிப் படை அவர் கொல்லப் பட்டதாக ஒரு முறை தெரிவித்தது.

நக்கீரன் போன்ற பத்திரிக்கை வெளியிட்ட செய்தி போன்றவை இந்தகைய கேள்வி எழுவதற்கான ஒரு காரணமாகும். மேலும், இது போன்ற செய்திகளை ஈழ இணைய தளங்கள் தொடர்ந்து வெளியிடு வதும் மற்றொரு காரணமாகும்.

ஈழப்பிரச்சனை உச்சநிலையில் இருந்த  போதும் பிரபாகரன் கொல்லப்பட்டதாகவும், கொல்லப் படவில்லை என பல்வேறு செய்திகள் வெளிவந்த நிலையில் இணைய பக்கங்களில் தீவிர விவாதம் நடந்து வந்த காலத்தில் அதன் உண்மை நிலையை அறிந்து கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் எனக்கும் இருந்தது.

மே 23 2009 நேரத்தில் கொல்லப் பட்டதாக சிலப் புகைப் படங்கள் வெளியாயின. அந்தப் புகைப் படத்துடன் பிரபாகரன்  அவர்களின் பழைய புகைப்படத்துடன் ஒப்பிட்டு நான் உறுதி செய்து கொண்டிருந்தேன். நண்பரின் சமீபத்தையை கேள்வியால் அந்த ஒப்பீடு படத்தை வெளியிட முடிவு செய்தேன்.

இந்தப் படத்தில் குறிப்பாக  மூக்கு, காதுப் பகுதி, காதுப் பகுதியின் கீழ் உள்ள மடிப்புகள் மற்றும் அவரது உடலில் உள்ள கரும் புள்ளிகள் ஆகியவற்றை ஒப்பிட்டே பார்த்தால் ஒத்திருப்பது தெரியவந்தது.

மே 18 க்கு பின் ஒருவாரகாலம் இதுபற்றி மிகத் தீவிரமான செய்திகள் இணையத்தில் உலவி வந்தன. அதன் பின்பு இணையத்தில் தீவிரமாக பிரபாகரன் உயிருடன் இருப்பதாக எழுதிக் கொண்டிருந்த நண்பர்கள் சிலருக்கு அனுப்பினேன். அதன் பின் இந்த கருத்தை அவர்கள் வலியுறுத்தி எழுதாமல் விட்டு விட்டனர்.

எனினும், இன்றுவரை பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா? என்ற கேள்விகள் எழுந்து கொண்டிருக்கிற நிலையில் இந்த புகைப்படம் சிலருக்கும் முடிவெடுக்க சிலநேரம் உதவலாம். என்ற நோக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அதற்காக பிரபாகரனின் முழுப்படம் மற்றும் அதன் பின் அந்த படத்துடன் ஒப்பிட்டு மற்றொரு படமும் இணைக்கப் பட்டுள்ளது.

பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா? இன்றும் சில கேள்விகள் கேட்டுக் கொண்டிருப்பவர்கள், இந்த படத்தை பார்ப்பார்களேயானால் இதன் மூலம் ஒரு முடிவை எட்டுவார்களா என்பது தெரியவில்லை.

SHARE