பிரபாகரன் பத்திரமான இடத்தில் இருப்பதாக தகவல் எனக்கு கிடைத்திருக்கிறது! – இரா.சனார்த்தனம்

418

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் வீரச்சாவடைந்ததாக இலங்கை அரசு தெரிவித்ததன் பின்னர் –

விடுதலைப் புலிகள் அமைப்பு தொடங்கப்பட்டபோது, பிரபாகரனுக்கு உறுதுணையாக இருந்த உலகத் தமிழர் பேரவைத் தலைவரான இரா.சனார்த்தனம் அவர்கள் – மே 2009 இல் இந்திய  ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்திலிருந்து சில……

thalaivar1

”பிரபாகரனை எத்தனையோ தடவை இலங்கை அரசும் மீடியாக்களும் கொலை செய்திருக்கின்றன. ஆனால், அந்த செய்திகளை பிரபாகரன் ஒருபோதும் மறுத்தது கிடையாது.

பிரபாகரன் மிக பத்திரமான இடத்தில் இருப்பதாகத்தான் எனக்குத் தகவல் கிடைத்திருக்கிறது.

நேதாஜியின் வழிநடக்கும் போராளி பிரபாகரன். நேதாஜியின் படத்துக்கு மாலை போட்டு கும்பிட்டுத்தான் என் வீட்டில் புலிகள் அமைப்பை அவர் துவக்கினார்.

நேதாஜியின் பாதையைத்தான் அவர் பின்பற்றவும் செய்கிறார். இக்கட்டான சூழலில் அவர் நேதாஜியின் வரலாற்றைத்தான் படிப்பார். அதனால் அவருடைய மரணம் நேதாஜியின் மரணத்தைப் போன்றதாகத்தான் அமையும்.

முடிவு காலத்திலும் பிரபாகரன் இருக்கிறாரா இல்லையா என்பதை யாராலும் அறிய முடியாத நிலைதான் வரும். ஆனால், அவர் ஆம்புலன்ஸில் தப்பி ஓடியதாகவும், அப்போது சுட்டதாகவும் சிங்கள ராணுவம் சொல்வது, தமிழ்நாடு போலீஸின் என்கவுன்ட்டர் கற்பனைகளை எல்லாம் தூக்கிச் சாப்பிடுவது போலிருக்கிறது!” என்றார் இரா.சனார்த்தனம்.

குறிப்பு ;- உலகளவில் தமிழர்கள் மத்தியில் பரவலாக அறியப்பட்டவரும், குறிப்பிடத்தகுந்த தமிழ் ஆர்வலருமான இரா. சனார்த்தனம் அவர்கள் பெப்ரவரி 2013 சென்னையில் காலமானர் என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட ஈழ விடுதலை போராளிகள் பலரை தமிழகத்துக்கு முதல் முறையாக அழைத்து வந்தவர் இரா. சனார்த்தனம்தான். போராளிக் குழுக்களிடையே பிரிவுகள் ஏற்பட்டபோது, அவர்களை ஒற்றுமைப்படுத்த பெரிதும் முயற்சி செய்தவரும் இவர்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

sanarthanam

 

SHARE