பாகுபலி 2 படத்தை தொடர்ந்து ரசிகர்கள் விரும்பிய ஒரு விஷயம் பிரபாஸ், அனுஷ்கா திருமணம். ஆனால் அது நடப்பதாக தெரியவில்லை, இதற்கிடையில் பிரபாஸின் சாஹோ படத்தில் அனுஷ்கா நாயகியாக கமிட்டாகி இருப்பதாக கூறப்பட்டது.
தற்போது வந்த தகவல்படி, ஏற்கெனவே கமிட்டான தமிழ் பட வேலைகளால் அனுஷ்கா சாஹோ படத்தில் இருந்து வெளியேறிவிட்டாராம். அவருக்கு பதிலாக நடிகை பூஜா ஹெட்ச் நாயகியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.