பாகுபலி என்ற பிரம்மாண்ட வெற்றி படத்தை கொடுத்த பிரபாஸின் அடுத்த படம் சாஹோ. இப்படத்திற்கான படப்பிடிப்பு எப்போதோ தொடங்கியுள்ள நிலையில், பிரபாஸ் அண்மையில் தான் படப்பிடிப்பில் இணைந்துள்ளார்.
படத்தில் அவருக்கு நாயகியாக பாலிவுட் நடிகை ஷரத்தா கபூர் கமிட்டாகி இருப்பது நாம் அனைவருக்கும் தெரிந்த விஷயம். இந்த நிலையில் இப்படத்தில் அருண் விஜய் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறாராம். இந்த தகவலை அவரே தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்