அஜித்தின் நடிப்பில் வெளியான பல படங்கள் தெலுங்கு, கன்னடம் மொழிகளுக்கு ரீமேக் மற்றும் டப்பிங் செய்யப்பட்டுள்ளன.
அப்படி அஜித்தின் இரட்டை நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஆன படம் பில்லா. விஷ்ணு வர்தன் இயக்கியிருந்த இப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் பாகுபலி நாயகன் பிரபாஸ் அஜித்தின் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அங்கேயேயும் பிளாக்பஸ்டர் ஆக, படம் வெளியான அன்று அஜித் பில்லா தெலுங்கு படக்குழுவுக்கு போன் செய்து வாழ்த்து சொல்லியதோடு படத்தின் ஹீரோ பிரபாஸுக்கும் எனது வாழ்த்தை கூறிவிடுங்கள் என கூறியுள்ளார்.
இதனை அப்படக்குழு பிறகு பிரபாஸிடம் கூற, இந்த நிகழ்வை மறவாமல் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார், பிரபாஸ்