தளபதி விஜய் நடிப்பில் மெர்சல் படம் பிரமாண்ட வெற்றியை பெற்றது. நீண்ட வருடங்களுக்கு பிறகு தமிழகத்திலேயே ரூ 100 கோடி வசூல் செய்த படம் மெர்சல் தான்.
வெளிநாடுகளில் மட்டும் ரூ. 75 கோடி, கர்நாடகா, கேரளா, ஆந்திரா என அனைத்து பகுதிகளிலும் ரூ 15 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது.
ஆனால், இப்படத்தை எடுத்த தேனாண்டாள் தற்போது மிகவும் சரிவில் உள்ளது, தனுஷ் படம், சங்கமித்ரா என பல படங்களுக்கு பூஜை போட்டனர்.
இதில் ஒரு படம் கூட இன்னும் தொடங்கவில்லை, அதைவிட தனுஷ் படம் நின்றே விட்டதாக கூறப்படுகின்றது.
மேலும், டிக்டிக்டிக், சந்தானத்தின் படம் என ஒரு சில படங்களை வியாபாரம் செய்வதாக இருந்து அதிலிருந்தும் தேனாண்டாள் பின் வாங்கியுள்ளது.
இத்தனை பெரிய வெற்றிக்கு பிறகும் தேனாண்டாள் படங்கள் தயாரிக்க தயங்குவது ஏன் என்று தெரியவில்லை.