-
தல அஜித்தின் வேதாளம் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகி ரசிகர்களின் வரவேற்பால் பிரமாண்ட வெற்றி பெற்றுள்ளது. ‘படம் ரிலிஸான தேதி முதல் இன்று வரை மழையிலும் நல்ல வசூல் வருகிறது தான்.’ என தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் தெரிவித்திருந்தார்.
முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் 15 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்த இந்த படம், இரண்டு வாரங்களில் 117 கோடி ரூபாய் அளவிற்கு வசூல் ஈட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சிவா இயக்கியுள்ள இந்த படத்தில் லக்ஷ்மி மேனன், ஸ்ருதி ஹாசன், சூரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.