பிரம்மாண்ட இயக்குனரின் அறிவுரையை ஏற்ற அலியா பட்

120
ராஜமவுலியின் அறிவுரையை ஏற்ற அலியா பட்

உடலை பிட்டாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் நடிகைகளிடம் அதிகரித்திருக்கிறது. சமந்தா, ரகுல் பிரீத் சிங், ஸ்ரேயா, தீபிகா படுகோனே உள்ளிட்ட பல நடிகைகள் கடினமான உடற்பயிற்சிகளில் ஈடுபடுகின்றனர். அந்த பட்டியலில் நடிகை அலியாபட் இணைந்திருக்கிறார்.
பாகுபலி படத்தையடுத்து ராஜமவுலி இயக்கத்தில் ஆர்ஆர்ஆர் சரித்திர படம் உருவாகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகும் இப்படத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர் நடிக்கின்றனர். ஹீரோயினாக அலியா பட் அறிமுகமாக உள்ளார்.
பாகுபலியில் பிரபாஸ், ராணா போன்றவர்கள் கதாபாத்திரங்களுக்கு ஏற்ப உடற்கட்டை சிக்ஸ்பேக் தோற்றத்துடன் கட்டுமஸ்தாக மாற்றிக்கொண்டனர். அதற்காக கடுமையான பயிற்சிகளில் அவர்கள் ஈடுபட்டனர். அதேபோல் தற்போது நடிக்கும் ராம் சரண், ஜூனியர் என்டிஆரும் கடுமையான பயிற்சிகள் மூலம் உடற்கட்டை கட்டுமஸ்தாக்கியிருக்கின்றனர்.
ஆலியா பட் - ராஜமவுலிஇவர்களுடன் நடிக்கும் அலியாபட்டும் ஆக்‌ஷன் காட்சிகளில் நடிக்க வேண்டியிருப்பதால் அவரையும் உடலை பிட்டாக வைத்துக்கொள்ள சொல்லி இயக்குனர் அறிவுரை கொடுத்திருந்தார். அதை ஏற்று கடந்த சில மாதங்களாக கடுமையான பயிற்சிகளில் அலியா பட் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் 70 கிலோ எடையை தூக்கி பயிற்சி செய்த வீடியோவை அவர் வெளியிட்டார்.
SHARE